ரூ.14,000 கோடி எங்கே?… விஜய்யின் சீக்ரெட்டை அவுட் ஆக்கிய இபிஎஸ்…. அதிர்ச்சியில் தவெக…!

By Nanthini on புரட்டாதி 29, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிகள் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் தேர்தல் களம் 5 முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்தித்து வரும் வேளையில், பிரச்சாரப் பகுதிகளில் அக் கட்சியின் வேட்பாளர்களுக்குப் பரவலான எதிர்ப்புகளும் சவால்களும் எழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தவெக தலைவர் விஜய்யை நேரடியாகக் இலக்கு வைத்துத் தங்கள் அரசியல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய் மீது கடுமையான நிதி சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக தொண்டர்களே தங்கள் தலைவர் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்குவதாகப் பெருமையுடன் கூறிவரும் நிலையில், அவர் நடித்த 70 படங்களுக்குக் கணக்கிட்டால் சுமார் ரூ.14,000 கோடி வருமானம் வந்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார். ஆனால், வேட்புமனுவில் வெறும் ரூ.650 கோடி மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மீதமுள்ள பெரும் தொகை எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பி, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவே கட்சி தொடங்கப்பட்டுள்ளதா என்ற மக்கள் கேள்வியையும் முன்வைத்தார்.

   

மேலும், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் சரியாகச் செலுத்தாதவர் எவ்வாறு தூய்மையான ஆட்சியைத் தர முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு உரிய வரி செலுத்தாத விவகாரத்தைக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் ஏய்ப்பது ஊழலுக்குச் சமம் எனக் கடுமையாக விமர்சித்தார். தவெகவினர் பேசி வரும் ‘தூய ஆட்சி’ என்பது வெறும் காகித அளவிலான விளம்பரம் மட்டுமே என்றும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுத்தபோதே அக் கட்சியின் சாயம் வெளுத்துவிட்டதாகவும் சாடினார்.

   

சொந்தக் குடும்ப உறவுகள் மற்றும் நிஜ வாழ்க்கை நடத்தையைக் குறிப்பிட்டும் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் விமர்சித்தார். பொது மேடைகளில் ‘உங்கள் வீட்டு அண்ணன், தம்பி, மாமன்’ எனப் பாச மழை பொழியும் விஜய், நிஜ வாழ்க்கையில் பெற்ற தாய், தந்தை மற்றும் கட்டிய மனைவியோடு இணைந்து வாழாதபோது, பொதுமக்களுக்கு எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார். திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் தற்போது நிஜ வாழ்க்கையிலும், பொது அரசியல் வெளியிலும் நடித்து மக்களைக் குழப்பி வாக்குச் சேகரிக்க முயல்வதாகக் கூறித் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.