Connect with us

கோலாகலமாக நடந்த நடிகர் விஜய் கணேஷ் மகனின் திருமண வரவேற்பு.. ஒன்று திரண்ட பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்..!!

TRENDING

கோலாகலமாக நடந்த நடிகர் விஜய் கணேஷ் மகனின் திருமண வரவேற்பு.. ஒன்று திரண்ட பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்..!!

 

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகரான வடிவேல் உடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் நடிகர் விஜய் கணேஷ். இவர் வடிவேல் உடன் இணைந்து வக்கீல் வண்டு முருகன் காமெடியில் அம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல இருக்கிறது என் கட்சிக்காரரின் தலை என்ற வசனம் மூலம் புகழ்பெற்றார். கடந்த 1985-ம் வருடத்தில் இருந்து சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் விஜய் கணேஷ் பல படங்களில் நடித்து வந்தார்.

Actor Vijay Ganesh: 'மேடை தான் சோறு போடுது' -விஜய் கணேஷ் உருக்கம்!-comedian vijay  ganesh latest interview - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்

   

சென்னையில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே பட வாய்ப்புக்காக முயற்சி செய்துள்ளார். பாடல் ஆசிரியர் ஒருவருடன் கிடைத்த நட்பின் மூலமாக கல்லூரி மாணவனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் கணேஷ் என்ற பெயரை விஜய் கணேஷ் என மாற்றிக் கொண்டார். வடிவேல் உடன் இணைந்து விஜய் கணேஷ் 62 படங்களில் நடித்துள்ளார்.

comedy actor vijay ganesh shared about his journey in cinema |  //28.02.2022// ”வடிவேலு என்னை கன்னா பின்னானு திட்டினாரு “ - நகைச்சுவை  நடிகர் விஜய் கணேஷ்

இப்போது அவ்வளவாக படங்களில் இவர் நடிப்பதில்லை. விஜய் கணேசன் சொந்த ஊர் புதுக்கோட்டை மணல்மேல்குடி கிராமம். இவருக்கு விவசாயம் மீது அதிக ஆர்வம் உண்டு. ஒரு சில கலை நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார். கலை நிகழ்ச்சிகள் மூலம் நிறைய விருது வாங்கியுள்ளார். இந்நிலையில் விஜய் கணேஷ் மகன் வி.வீரபாண்டி என்ற விஜயகுமாருக்கும் காவியா என்ற பெண்ணுக்கும் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி குன்றத்தூரில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.கே.எம் சின்னையா, அதிமுகவை தலைவர் தமிழ் மகன், எஸ்பி வேலுமணி, வருகை பகுதி செயலாளர் ஏ.எம் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் நடிகை வடிவுக்கரசி, அனுமோகன், பெஞ்சமின், பூச்சி முருகன், காதல் சுகுமார், பாபா லட்சுமணன், அம்பானி சங்கர், ஜூலி பாஸ்கர், விசித்திரன், இமான் அண்ணாச்சி என திரையுலகை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது அதனை பார்த்த ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

#image_title

author avatar
Priya Ram
Continue Reading
To Top