டெல்லிக்கு சொகுசு விமானத்தில் பறந்த விஜய்… ஒரு மணி நேர வாடகை இத்தனை லட்சமா..?

By Soundarya on தை 13, 2026

Spread the love

விஜய் டெல்லி பயணத்திற்காகப் பயன்படுத்திய ‘எம்ப்ரேர் லெகசி 600’ (Embraer Legacy 600) ரக சொகுசு விமானம், ‘பிளை எஸ்பிஎஸ்’ (Fly SBS) என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். சுமார் 13 பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வசதி கொண்ட இந்த விமானத்தில் உயர்தரமான உட்புற அமைப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன. இதன் ஒரு மணி நேர வாடகை மட்டும் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

விமான வாடகையுடன் சேர்த்து, தரையிறங்கும் விமான நிலைய கட்டணம் (Landing charges) மற்றும் இதர பராமரிப்பு செலவுகளையும் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும் என்பதால், விஜய்யின் இந்த டெல்லி பயணத்திற்கு மட்டும் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை செலவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.