தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு, தற்போது பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திமுகவின் மிரட்டல் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டது, ரஜினி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரையும் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த மோதலின் உச்சகட்டமாக, மதுரை மாநகர் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த போஸ்டர்களில், “காக்கா குஞ்சுகளுக்கும், கள்ளச்சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் தலைவா” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் ரசிகர்களை ‘காக்கா குஞ்சுகள்’ என்றும், ஆதவ் அர்ஜுனாவை ‘கள்ளச்சீட்டு’ என்றும் மறைமுகமாகச் சாடி, ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தவெக மற்றும் ரஜினி ரசிகர்களிடையே வெடித்துள்ள இந்தப் போஸ்டர் போர், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விஜய் அரசியலில் தடம் பதிக்க முயலும் வேளையில், அனுபவம் வாய்ந்த ரஜினி ரசிகர்களுடன் ஏற்பட்டுள்ள இந்த மோதல் தேவையற்றது என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இரு தரப்பினரும் தங்களது தலைவர்களை விட்டுக் கொடுக்காமல் சமூக வலைதளங்களிலும் நேரடியாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…