கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் விஜய்க்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதில் விஜய்க்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தாலும் சிலர் அவருக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதேசமயம் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் கரூர் சம்பவம், தமிழக வெற்றிக்கழகம் மற்றும் அதிமுக கூட்டணி சர்ச்சை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளின் நிலை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்தடுத்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று அல்லது நாளைக்குள் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கரூர் துயர சம்பவத்திற்கு 16 நாட்கள் துக்க மனுசரித்து வருவதாகவும் விரைவில் பேசுவோம் எனவும் ஆதவ் அர்ஜுனா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
