மீண்டும் ஒரு மரணம்…! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய விஜய்… தொண்டர்களின் உயிரை விட அரசியல் முக்கியமா..? கிளம்பிய சர்ச்சை..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வடு மறைவதற்குள்ளேயே, சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சூரஜ் (37) என்பவர் வெயில் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளின் போது, அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனம் நிலவி வருகிறது. தற்போது சேலத்திலும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ள நிலையில், தவெக-வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொண்டர்களின் நலன் குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் விஜய்யின் மௌனத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “தொண்டர்களின் உயிரை விட அரசியல் முக்கியமா?” என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவிக்காதது ஒரு தலைவருக்கு அழகல்ல என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சேலம் உயிரிழப்பு குறித்து விஜய் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான இரங்கலோ அல்லது நேரடிச் சந்திப்போ நிகழாதது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தவெக-வின் மக்கள் தொடர்பு மற்றும் பொறுப்புணர்வு மீதான எதிர்மறை விவாதங்களை உருவாக்கியுள்ளது.