காஞ்சிபுரத்தில் இன்று மக்கள் சந்திப்பில் விஜய் பேசி வருகிறார். அதில் TVK ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் நிரந்தர வீடு, மோட்டார் சைக்கிள், கார் வாங்கும் அளவு பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் உள்ளிட்டவை கொண்டவரவுள்ளதாக அறிவித்தார்.
மேலும் திமுகவை விமர்சித்த அவர் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள தவெகவிற்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கூறிய தவெகவிற்கு கொள்கை இல்லையா? திமுகவின் கொள்கையே கொள்ளை தானே என்று விமர்சித்துள்ளார்.
