வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன்… காத்துல கல்வீடு, செவ்வாய் கிரகத்தில் IT கம்பெனி…. லிஸ்ட் போட்டு CM-ஐ கலாய்த்த விஜய்..!!

By Soundarya on புரட்டாதி 27, 2025

Spread the love

காலை 8.30 மணிக்கு தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் பேசினார்.  நாமக்கல் பரப்புரையில் அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்த விஜய், “நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மாவட்டங்களில் நல்ல மருத்துவ வசதி இல்லை, நல்ல மருத்துவர்கள் இல்லை என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்கிறார்.

மேலும் பிரசாரத்தில் ஏதாவது புதுசா பேசுங்க விஜய் என்று விமர்சனம் வைத்தவர்களுக்கு  விஜய் கிண்டலாக பதிலளித்துள்ளார். புதுசா என்ன பேசுறது. அமெரிக்காவுக்கு ஒத்த அடி பாதை போடப்படும், செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என நம்ம முதல்வர் மாதிரி அடிச்சி விடுவோமா என தொண்டர்களை பார்த்து கேட்டார்.