தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக் காட்டியுள்ளார். 2024-இல் கட்சி தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில், தான் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, தவெகவை முதன்மை சக்தியாக உருவெடுக்கச் செய்திருப்பது ஒட்டுமொத்த தேசத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் கோலோச்சிய மண்ணில், எம்ஜிஆர் கூட கட்சி தொடங்கிய ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் என்கிற வரலாற்றை முறியடித்து, மிகக்குறுகிய காலத்தில் அரியணையை நெருங்கியுள்ள விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி, தமிழக அரசியலில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
