திடீர் திருப்பம்… 2026-ல் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி…. வெளியான பரபரப்பு தகவல்…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது.

இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.  விரைவில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் தொடங்குகின்றார்.

   

இந்நிலையில் திருச்சியில் நாளை விஜய் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார். இதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதும், அதில் திருச்சி கிழக்கில் போட்டியிட்டால் அவரின் வெற்றி உறுதியெனவும் தெரியவந்துள்ளது. இதனால்தான் திருச்சியை மையமாக வைத்து தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்குகிறாராம்.