தன்னுடைய Fans-காக இவ்ளோ ரிஸ்க் எடுக்குறாரே.. GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய் (வீடியோ)..

By Begam on தை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்க உள்ளார்.

   

அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளார். அப்பா  மற்றும் மகனாக இருக்குமோ என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலே ஏற்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

   

#image_title

 

தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘ தளபதி 68’ படத்தின் தலைப்பு   G.O.A.T = Greatest Of All Time என்றும், First லுக்குடன் வெளிவந்து இணையத்தில் படுவைரலானது.

இதைத்தொடர்ந்து அவ்வப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்நிலையில் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் GOAT படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அங்கு தளபதியை காண கூட்டம் கூட்டமாக சென்றுள்ளனர்.

அப்பொழுது தன்னை காண ரசிகர்கள் வந்ததை அறிந்த நடிகர் விஜய்  சூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்தப்பட்டிருந்த கேரவன் மீது ஏறி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். அதோடு அவர்களுக்கு Flying kiss கொடுத்தும்  உற்சாகப்படுத்தினார்.  இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.