நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களமிறங்கியுள்ளார். இரண்டு முறை மாநாடு நடத்தினார். தற்போது சனிக்கிழமை தோறும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
அடுத்த சனிக்கிழமை வடசென்னை, திருவள்ளூரில் அவர் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மாற்றமாக, சேலம், நாமக்கல்லில் அன்றைய தினம் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
