ஷாக் நியூஸ்… திடீரென தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்யும் விஜய்?… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் பயணம் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இரண்டு மாநாடுகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். இதனால் விஜயின் அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவுகள் குவிந்தாலும் மறுபக்கம் அரசியல் பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதால் கடந்த சனிக்கிழமை என்ற நடைபெற இருந்த பெரம்பலூர் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்தார் விஜய். அதனைப் போலவே வருகின்ற சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் மயிலாடுதுறை பிரச்சாரத்தை ஒத்திவைத்துவிட்டு நாகை மற்றும் திருவாரூரை மற்றும் கவர் செய்ய விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.