ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் போதாததால் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 18ஆம் தேதிக்கு பிரச்சார கூட்டத்தை கட்சியினர் மாற்றி வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
அந்த இடத்தில் காவல்துறையிடம் அனுமதி கேட்டதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் KA செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் தரப்பில் இருந்து 84 நிபந்தனைகள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் டிசம்பர் 18ஆம் தேதிக்கு விஜயின் பிரச்சார கூட்டத்தை கட்சியினர் மாற்றி உள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…