கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முடிவு எடுத்திருப்பதாக நேற்று கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக, கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆதவ் அர்ஜூனா மனுத்தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு உறுதியான உடனே விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பப்பட்ட நிலையில், சற்றுமுன் சம்பவம் நடந்து 34 மணி நேரத்திற்கு பின் விஜய் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். சனிக்கிழமை இரவு வீட்டிற்கு சென்ற அவர் இன்று வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
