அஜித் – ஷாலினி திருமணத்தில் மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்ட விஜய்.. பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..

By Begam on மார்கழி 26, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் ரசிகர்களால் தல, தளபதி என்று கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

   

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.  இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’  திரைப்படத்தில் தற்பொழுது விஜய் நடித்து வருகிறார்.

   

 

நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஜேசன் சஞ்சய், சஞ்சனா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் இணைந்து தல அஜித்தின் திருமணத்தில் கலந்து கொண்ட திருமண புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அஜித்தின் திருமணத்தில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் தல அஜித்தின் திருமணத்தில் கலந்து கொண்ட அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை தல, தளபதி ரசிகர்கள் தற்பொழுது படுவைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…