கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி டேவிட்சன், ” 30 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை விஜய் கடந்துவர 2 மணி நேரம் ஆனது. பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட ஊர்களை விட கரூரில் தவெக பரப்புரைக்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. 50 மீட்டர் முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேசிவிடச் சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி அதை கூறியும் மறுத்துவிட்டனர்” என்றார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…