“பிரதமர் ரேஸில் மோடி, ராகுல் தான்… விஜய் இல்லவே இல்லை”…. தமிழ்நாட்டை தாண்டினா விஜய்யை யாருக்கு தெரியும்?….. தவெக-வை விளாசிய சுதீஷ்….!

Spread the love

தேமுதிகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ், வேலூரில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸை நேரில் சந்தித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டார். ரூ.5 கோடி தொகுதி நிதியில் குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து விவாதித்த அவர், வேலூர் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக மேலும் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கவும் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.

அரசியல் களத்தில் தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய்யை எல்.கே. சுதீஷ் கடுமையாகச் சாடினார். மேட்டூர் அணைக்கு நீர் திறக்கச் சென்ற முதல்வரை வரவேற்கச் செல்லும் வழியெல்லாம் வரவேற்புத் தடுப்புகள் அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் தாம் குரல் கொடுத்ததாக நினைவு கூர்ந்தார். அதேநேரத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கிய அரசின் நடவடிக்கையைப் பாராட்டி வரவேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், “தமிழ்நாட்டைத் தாண்டி வேறு மாநிலங்களுக்குச் சென்றால் விஜய் யாரென்றே மக்களுக்குத் தெரியாது; பிரதமருக்கான பந்தயத்தில் நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும் மட்டுமே உள்ளனர். அதனால் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் விஜய் வர வாய்ப்பே இல்லை” என்று மிகக் காரசாரமாக விமர்சித்தார்.

தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை “ஜஸ்ட் பாஸ்” எனச் சித்தரித்த சுதீஷ், சட்டப்பேரவையில் 100 நாட்களைக் கடந்த பின்னரும் அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளிக்காமல், மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்கும் நிலையைச் சுட்டிக்காட்டினார். வரும் காலங்களில் அனைத்து துறை அமைச்சர்களும் சட்டப்பேரவையில் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பேரவையில் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

8 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

8 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

9 மணத்தியாலங்கள் ago