Connect with us

தொடங்கியது விஜய் ஆன்டனி  மகள் மீராவின் இறுதி ஊர்வலம்…! கண்ணீருடன் பின் தொடரும் பிரபலங்கள்…!

CINEMA

தொடங்கியது விஜய் ஆன்டனி  மகள் மீராவின் இறுதி ஊர்வலம்…! கண்ணீருடன் பின் தொடரும் பிரபலங்கள்…!

 

திரையுலகில் இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார்.  நடிகர் விஜய் ஆண்டனி ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   17 வயது மகள் மீரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.

   

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் நேற்று  காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்த முதல் கட்ட விசாரணையில் மீரா இறப்பிற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீராவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு நேற்று இரவே வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கே வந்து அவருக்கு ஆறுதல் கூறி  வந்தனர். தற்பொழுது விஜய் ஆன்டனி மகள் மீராவின்  ஊர்வலம் தொடங்கியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top