பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி பல்வேறு திரைப்படங்களில் நடித்து நடிகராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக வேலை பார்த்துள்ளார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
தற்போது தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த வாரத்திற்கான எபிசோடில் சிறப்பு நடுவராக விஜய் ஆண்டனி பங்கேற்றுள்ளார். அவர் மனோ பாடிய பாடலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் தனது லைவ் கான்சர்ட்டில் பாட மனோவுக்கு வாய்ப்பு தருவதாக மேடையிலேயே விஜய் ஆண்டனி அறிவித்தார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
