பிரியுறது தப்பு இல்ல.. 4 பேர் அதுல தலையிடக்கூடாது.. விவாகரத்து பற்றிய கேள்விக்கு நச்சுன்னு பதில் சொன்ன விஜய் ஆண்டனி..!!

By Priya Ram on செப்டம்பர் 29, 2024

Spread the love

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் வானம் கொட்டட்டும், படைவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தனா. இவரது இயக்கத்தில் உருவான ஹிட்லர் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

   

சமீபத்தில் விஜய் ஆண்டனி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் இப்போது பிரபலங்கள் விவாகரத்து செய்கிறார்கள். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

   

 

கல்யாணம் பண்ணி விட்டோம் என்பதற்காக ஒருவர் இன்னொருவரை கண்ட்ரோல் செய்யக்கூடாது. முடிஞ்ச வரைக்கும் ஒருத்தர் இன்னொருத்தரோட கனவுக்கு சப்போர்ட் பண்ணனும். முடிஞ்ச வரைக்கும் ஒன்னா டிராவல் பண்ணுங்க. அப்படியே ஒரு கட்டத்துல முடியல. சேர்ந்து வாழ்வதைவிட பிரிஞ்சா பெட்டரா இருக்கும் அப்படின்னு உங்க உள் மனசுக்கு தோணுச்சு. சில விஷயங்கள் செட் ஆகல.

ரெண்டு பேருக்கும் இடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கு. ஏதோ எரிச்சலா பீல் பண்றாங்க அப்படிங்கிறப்ப அந்த உறவு பிரியுறதுள்ள தப்பு கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் ஏதோ ஒரு காரணத்தால பிடிக்கல அப்படின்னும் போது பரஸ்பரமா பேசி முடிவெடுக்கலாம். அந்த முடிவுல வெளிய இருந்து 4 பேர் வந்து உள்ள புகுந்து கெடுக்கிற மாதிரி இருக்க கூடாது என பேசியுள்ளார்.