“விஜய் அண்ணாவ தொட்டா தமிழ்நாடே பிளாஸ்ட்”… போலீஸ் ஸ்டேஷன் இல்லாம போயிரும்.. மிரட்டல் வீடியோ வெளியிட்ட சிறுவர்….!

Spread the love

கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையே ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யை தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருந்தாலும் அவர் மீது குற்றமில்லை என்று பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பொய்யான செய்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான சிறுவன் ஒருவன் விஜய்க்கு ஆதரவு என்ற பெயரில் தமிழக காவல்துறைக்கு விரட்டல் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் சிறுவர், விஜய் அண்ணாவ தொட்டுப் பாருங்க, தமிழ்நாடே பாதிக்கும். போலீஸ் ஸ்டேஷனே பிளாஸ்ட் ஆகிடும்.

விஜய் அண்ணா வீட்டுக்குள்ள இறங்கி பாருங்க தமிழ்நாடு பிளாஸ்ட், ஒண்ணுமே பண்ண முடியாது. தொட்டு மட்டும் பாருங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்காது. எல்லா ரசிகர்களும் அலற உற்றுவோம். ஒண்ணுமே பண்ண முடியாது. பஸ் எல்லாம் எரியும் என்று சிறுவன் மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு தான் பேசிய விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த சிறுவன் அதற்கு மன்னிப்பு கேட்டும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். Sorry இனிமே என்னுடைய ஐடியில் வீடியோ வராது, இனிமேல் நான் வீடியோ பதிவிட மாட்டேன், தவறாக வீடியோ போட்டதற்கு மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

2 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago