தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், இந்தத் தகவல் தீயாகப் பரவி வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் ராஜ் நிடிமோரு மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதாகப் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அதே பாணியில் நடிகர் விஜயும், நடிகை த்ரிஷாவும் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகச் சுசித்ரா அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து பொது நிகழ்ச்சிக்கு ஒரே காரில் வந்தது போன்ற நிகழ்வுகள் ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தன. சுசித்ராவின் இந்த அதிரடித் தகவல் அந்த சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது. விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவுதான் சங்கீதாவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு முக்கியக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற வதந்திகள் பரவுவது விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பிஸியாக இருக்கும் விஜய், இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. சுசித்ராவின் இந்தப் பேட்டி உண்மையா அல்லது வழக்கமான சர்ச்சை பேட்டியா என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும்.
View this post on Instagram
