தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து ஒரே வீட்டில் வாழத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், இதனால் சங்கீதா லண்டனில் வசித்து வந்ததாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. இந்தச் சூழலில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னின்று நடத்திய சுமுகமான சமரசப் பேச்சுவார்த்தையின் பலனாக, தம்பதியினருக்குள் மீண்டும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சுமுக முடிவைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து சங்கீதா சென்னைக்குத் திரும்பியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக நிலவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது தம்பதியினரின் புகைப்படம் வெளியாகலாம் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
