Categories: சினிமா

அஜித்தால் ஹீரோவான நடிகர் சூர்யா.. இதுவரை பலரும் அறியாத ஆச்சரிய தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொண்டாடப்படுபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருமே என்னதான் நண்பர்களாக ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு வருகின்றன. இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களின் ஆரவாரம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். விஜய் மற்றும் அஜித் இருவருமே ஒரே காலகட்டத்தில் திரை உலகில் அறிமுகமானவர்கள் தான். கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.

அதன் பிறகு விஜய் மற்றும் அஜித் கூட்டணி எந்த ஒரு திரைப்படத்திலும் இணையவில்லை. ஆனால் விஜயுடன் இணைந்து நடிப்பதற்காக தேடி வந்த வாய்ப்பையும் அஜித் நிராகரித்துள்ளார். ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் அஜித்தும் விஜய்யும் இணைவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அஜித் மறுப்பு தெரிவித்த நிலையில் மணிரத்தினம் தயாரித்த இந்த திரைப்படத்தில் விஜய், சூர்யா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதலில் இப்படத்தில் விஜயுடன் நடிக்க அஜித்திடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அஜித்துக்கு கால் சூட் இல்லாததால் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதே சமயம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் அப்போது சில சிக்கல்களில் இருந்த காரணத்தால் இந்த நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது.

அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடித்தால்தான் இந்த படம் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் எவ்வளவு போராடியும் அஜித்தை இந்த படத்தில் நடித்து வைக்க முடியவில்லை. அதன் பிறகு தான் இயக்குனர் வசந்த் சூர்யாவை நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இந்தத் திரைப்படம் தான் சூர்யாவின் முதல் திரைப்படம் ஆகும். நேருக்கு நேர் திரைப்படத்தில் தொடங்கிய சூர்யாவின் பெரிய இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்க காரணம் அஜித் அன்று விட்டுக் கொடுத்த வாய்ப்பாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago