விஜய், அஜித் இருவரும் மறுத்த சூப்பர்ஹிட் திரைப்படம்.. வாய்ப்பை பயன்படுத்தி சம்பவம் செய்த ‘ஆக்ஷன் கிங்’..

By Deepika on மார்ச் 14, 2024

Spread the love

சினிமாவில் நடிகர்கள் சில படங்களை தவிர்ப்பது, பின்னாளில் அந்த படங்கள் சூப்பர்ஹிட்டாவது வழக்கமான ஒன்று தான். சூப்பர்ஸ்டார் ரஜினி தொடங்கி கமல், அஜித், விஜய், சூர்யா என பலரும் பல சூப்பர்ஹிட் படங்களை நழுவ விட்டுள்ளனர்.

   

ஆனால் ஒரு படத்தை அஜித் விஜய் இருவரும் மறுத்து வேறு ஒரு நடிகர் நடித்து சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இயக்குனர் சுராஜ் நடிப்பில் அர்ஜுன், வடிவேல் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் மருதமலை. இப்படத்தில் வரும் வடிவேலுவின் என்கவுண்டர் ஏகாம்பரம் காமெடி இன்றும் பலரும் பேவரைட்டாக உள்ளது. போலீஸ் கதையாக உருவான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

ஆனால் இதில் அர்ஜுன் நடிப்பதற்கு முன்பாக இயக்குனர் சுராஜ் அஜித் மற்றும் விஜய் ஆகியோரை தான் அணுகினாராம். இது குறித்து இயக்குனர் சுராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது நான் மருதமலை கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய்யை தான் முதலில் அணுகினேன் அனால் அவர் சச்சின் படத்தில் நடித்து வந்ததால் கால்சீட் கொடுக்க முடியாமல் போனது. ஒருவேளை விஜய் நடித்து இருந்தால் அவரின் கேரியரில் சிறந்த போலீஸ் படமாக இது அமைந்திருக்கும்.

அதன்பின் அஜித்தை அணுகி கதையை கூறினேன், அவருக்கும் இந்த கதை பிடித்திருந்தது ஆனால் ஏற்கனவே கிரீடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்ததால் இந்த படத்தின் மீது அவருக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. ஆகையால் அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நான் சுந்தர் சி இடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன், கிரி படத்தில் அர்ஜூனுடன் பழகியதால் அவருக்கு இந்த கதையை கூறினேன்.

அப்படி தான் அர்ஜுன் இந்த படத்திற்குள் வந்தார். அர்ஜுனுக்கு இந்த படம் பெரிய ஹிட்டாக அமைந்தது. அர்ஜுன் வடிவேல் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்தது என மருதமலை படம் குறித்து யாரும் அறியாத சில தகவல்களை கூறினார் இயக்குனர் சுராஜ்