Categories: சினிமா

வடிவேலுவுக்காக எழுதிய கதையில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிய விஜய்.. அட., இந்த படமா..!

Spread the love

90 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு தனது தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழி காரணமாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இத்தனைக்கும் அவர் அறிமுகமானக் காலம் கவுண்டமணி செந்தில் கூட்டணி புகழின் உச்சத்தில் இருந்த காலம்.

இதனால் பலரும் தங்கள் படங்களில் வடிவேலு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க தொடங்கினர். அதற்கெல்லாம் மேல் ஒரு புதுமுக இயக்குனர் வடிவேலுவை கதாநாயகனாக மனதில் வைத்து ஒரு திரைக்கதையையே எழுதியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எழில்தான்.

தான் உதவி இயக்குனராக இருந்தகாலத்தில் சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்த்த அவர் அதன் தாக்கத்தில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படக் கதையை எழுதியுள்ளார். சாப்ளின் போலவே வித்தியாசமான உடல்மொழி கொண்ட வடிவேலுவை அதில் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார்.

கதைப்படி வடிவேலு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் நாட்டுப்புற பாடகன். அவன் சினிமாவில் பாட்டு பாட வாய்ப்பு தேடி போராடுவது போலவும், அவன் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுவது போலவும் திரைக்கதையை அமைத்துள்ளார். கதையை முடித்துவிட்டு பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லியுள்ளார். ஒன்றும் வேலைக்காகவில்லை.

இதையடுத்து அவரது நண்பர்கள் இந்த கதையில் சில மாற்றங்களை செய்து ஏதாவது ஒரு இளம் கதாநாயகனுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு கூறியூள்ளார். அதன் பின்னரே திரைக்கதையில் மாற்றங்களை செய்து விஜய்க்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார்.

அப்படி அவர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. படத்தில் விஜய், சிம்ரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ் ஏ ராஜ்குமார் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் எவர் கிரீன் ஹிட்டாக அமைந்தன. படம் 175 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சிலவ்ர் ஜூப்ளி படமாக அமைந்தது.

vinoth

Recent Posts

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

1 minute ago

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

12 minutes ago

அமெரிக்கா Vs ஈரான்… போர் முடிவுக்கு வருமா, தீவிரமாகுமா?… ஈரானை அலறவிட்ட வான்ஸ்… அமெரிக்க துணை அதிபரின் அதிரடி எச்சரிக்கை…!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…

17 minutes ago

“இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்…” நேற்று உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றமா…? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!!

நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித…

19 minutes ago

அதிர்ச்சி..! ரூ.100 கோடி நில மோசடி… வசமாகச் சிக்கிய பெண் ஊழியர் & வழக்கறிஞர்… பெண் ஊழியரின் ரகசிய பிளான் அம்பலம்… பின்னணியில் யார்?…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த…

25 minutes ago

“என் வீட்டை விட்டுப் போக மாட்டேன்”… மூதாட்டியால் ஸ்தம்பித்த நாடு… 87 வயதில் புரட்சி செய்த மாரி கார்மென் காலமானார்… உலகையே கலங்க வைத்த மரணம்…!!

ஸ்பெயின் நாட்டில் எளிய மக்களின் வீட்டு உரிமைக்கான போராட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய 87 வயதான மாரி கார்மென் காலமானார்.…

33 minutes ago