வரிசையில் நிக்கும் முன்னணி இயக்குனர்கள்.. தளபதி 69 படத்தை எடுக்கப்போவது இவர் தான்.. கணபார்ம் பண்ணியாச்சு..

By Ranjith Kumar on பிப்ரவரி 7, 2024

Spread the love

தளபதி விஜய் அவரின் 67 வது படமான லியோ படம் வெற்றியை அடுத்து, அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோர்ட் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராமல் இருந்த சமயத்தில் தளபதி விஜய் அவர்கள் தான் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், நான் முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போவதாக தெரிவித்து இருந்தார். அவர் அறிக்கையில் 68 ஆவது படமான கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன், அதன் பின் 69ஆவது படத்தை முடித்துவிட்டு தான் முழுமையான அரசியல்வாதியாக ஆவேன் என்று சொல்லி இருந்தார்.

#image_title

அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, அப்ப 69 ஆவது படத்தை இயக்க போவது யார் என்று அனைத்து ரசிகர் மத்தியிலும் மிகப் பரவலாக பேசப்பட்டு கொண்டுள்ளது. முதலில் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இப்படத்தை இயக்க உள்ளதாக பேசப்பட்டது, அதன் பின் அவரும் இல்லை என்று தெரிய வர, ஒருவேளை லியோ 2வாக இருக்குமோ, மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைவாரா என்று பேசப்பட்டது, அதன் பின்னும் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற அரசியல் படங்களை தொடர்ந்து மீண்டும் அரசியல் கூட்டணிக்காக ஏ.ஆர். முருகதாசு உடன் இணைந்து அரசியல் சம்பந்தப்பட்ட படம் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியது, ஆனால் அதுவும் சர்ச்சையாக தான் உள்ளது தவிர உண்மையா என்று தெரியவில்லை, ஒருவேளை விஜய் அவர்கள் மீண்டும் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் போகிறாரா என்று காமெடியாக இணையதளத்தில் பேசிக் கொண்டுதான் உள்ளார்கள்.

   
   

#image_title

 

அண்மையில் வந்து செய்தியின் படி, வெகு நாட்களுக்கு முன்னால் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் விஜயிடம் சொன்ன கதை இப்போது விஜய் அவர்களுக்கு இச்சமயத்தில் சரியாக உள்ளதோ என்று இவர்கள் இருவரும் சேர்ந்து இணைந்த விஜய் 69 படத்தை கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது, படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் சென்றிருக்கும் வெற்றிமாறன் அவர்களே இந்த பரவி வரும் பொய்யான செய்தியை கண்டு ஈபில் டவர் மேல் ஏறி சிரிப்பார் என்று பேசிக்கொண்டு உள்ளார்கள், வெற்றிமாறன் அவர்கள் தளபதி விஜய் அவர்களின் 69 வது படத்தை இயக்குவது ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது. உண்மையில் யார் தான் 69 படத்தை இயக்க உள்ளார் என்று தெரியவில்லை, இப்போது வரை அது சர்ச்சையாக தான் உள்ளது. மக்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜயின் 69வது படத்தை யார் தான் இயக்கப் போகிறார் என்று.

#image_title