Connect with us

CINEMA

படங்களின் ப்ரமோஷனுக்கு வராத நயன்தாரா.. அதுக்கு இதான் காரணம்.. விக்னேஷ் அளித்த விளக்கம்..!!

விக்னேஷ்-சிவன் நயன்தாரா தம்பதியினர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் மலேசியாவில் அதன் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் கலந்து கொண்டனர்.

   

பெரும்பாலும் தான் நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார். ஆனால் கடந்த ஆண்டு அவர் தயாரித்து நடித்த கனெக்ட் படத்திற்கு பிரமோஷன் நிகழ்ச்சியாக ஒரு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் பேசிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு ஒரு விஷயம் சரி என்று தோன்றினால் மட்டுமே அதை பிரமோஷன் செய்வார்.

நிறைய நேரங்களில் அவர் அடித்த படங்களையே அவர் ப்ரொமோட் செய்யாமல் இருந்திருப்பார். ஒரு நல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் அதுவே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதுதான் அவரிடம் இருக்கும் நம்பிக்கை. ஆரம்பகால கட்டத்தில் ஒரு பிராண்ட் அம்பாசிடராக வருவார். அதைப்பற்றி பேசுவார். சில புகைப்படங்களை எடுப்பார் என நினைத்தேன்.

 

ஆனால் அப்படி இல்லாமல் பொருளின் டிசைன், பாட்டில், எழுத்தின் வடிவம், பேக்கேஜ் எனும் முழுவதையும் கவனித்து கொண்டு அதற்காக பல முயற்சிகளை எடுத்தார். இதை எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது என கூறினார்.

 

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top