‘அம்மா என் முகவரி நீ அம்மா!’… அம்மாவின் பிறந்தநாளுக்கு எமோஷனல் பதிவு வெளியிட்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்…

By Begam on ஆடி 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இதைத்தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

   

 

இதைத் தொடர்ந்து எழுந்த பல சர்ச்சைகளுக்கும், பல கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த தம்பதியினர்.

தற்பொழுது இவர்கள் தங்களது குழந்தையுடன் மகிழ்வான வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் தற்பொழுது ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர் அவ்வப்பொழுது தனது குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்து எமோஷனல் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவினை பார்த்த ரசிகர்களும் அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)