வாய்ப்பு கொடுத்த விக்னேஷ் சிவன்.. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தனது வேலையை காட்டிய SOFA சிறுவன்.. வைரலாகும் வீடியோ..

By Ranjith Kumar

Updated on:

2023 நவம்பர் கடைசி வாரத்தில் பெருமலையால் வந்த நீர்த்தேக்கத்தால் நம் மக்கள் அனைவரும் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருந்தோம் என்று நமக்கு தெரியும், அந்த சமயத்தில் பல பிரபலமான நடிகர்கள், அரசியல்வாதிகள், தீயணைப்புத்துறையினர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றி அவர்களை பத்திரமாக காப்பதில் மும்பரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்,

WhatsApp Image 2024 02 03 at 42340 PM

ஆனால் அதே சமயத்தில் இன்னொரு பக்கத்தில்.
வீடியோ ஒன்றில் சுட்டிக் குழந்தை மக்கள் வீட்டின் உள்ள சோபாக்கள் அனைத்தும் மலையில் அடித்து செல்லப்பட்டு மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாக இருப்பார்கள் அதனால் நான் எங்கள் கடையில் இருக்கும் சோபாக்களை கம்மி விலையில் தருகிறேன் என்று நகைச்சுவையாக பேசி வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தான், அந்த நகைச்சுவையான பேச்சால் அந்த வீடியோ பயங்கர வைரலாகி அவன் பெயர் “சோபா தம்பி” என்று செல்லமாக பெயர் ஆகிவிட்டது.

   

மேலும் அதைக் கண்ட தனியார் சேனல்கள் தங்கள் நிகழ்ச்சியில் அந்த சோபா தம்பியை அழைத்து பிரமோஷன் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள் அதில் அந்த சோபா தம்பி மிகக் குறுகிய காலத்தில் வெகுவாக வளர்ந்து வளர்ந்து பிரபலமாகிவிட்டார்.

அதை எடுத்து அந்த சுட்டி குழந்தை தமிழ் திரை உலகிலும் காலடி எடுத்து வைத்தான், விக்னேஷ் சிவன் இயக்கம் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி செட்டி நடிக்கும் திரைப்படத்தில் இந்த சோபா தம்பிக்கு ஒரு கதாபாத்திரம் விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கிறார்,

vignesh shivani. pradeep. sofa boy
sofa boy

அந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் விக்னேஷ் சிவனும் அவர் குழுவும் சேர்ந்து நீ சோபா விற்பது போல் எங்களையும் விற்று காட்டு என்று ஒரு சேலஞ்ச் கொடுத்திருக்கிறார்கள்,அதுக்கு இவனும் நான் உங்களை விட்ரு காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறி, இதுதான் எங்கள் எல் ஐ சி டீம், இதில் முதலில் விக்னேஷ் சிவனை கைகாட்டி இது டைரக்டர் சோபா இது அனைத்தும் பண்ணும் டைரக்ஷனும் பண்ணும், என்று நகைச்சுவையாக கூறி அடுத்ததாக, இது ரவிவர்மன் சோபா இது கேமரா பிடிக்கும், இது பிரதீப் ரங்கநாதன் சோபா இது நடிக்கும், ஃபைட் பண்ணும், ஹீரோ மெட்டீரியல், இது ஹீரோயின் கீர்த்தி செட்டி ஷோபா இது ஹீரோயின் வேலை பார்க்கும், இந்த சோபா காமெடி சோபா இது காமெடி மட்டும் தான் பண்ணனும், என்று நகைச்சுவையாக பேசி கடைசியில் தன் கடைக்கு பிரமோஷன் ஆக நித்யா பர்னிச்சர் வாங்க பெஸ்ட் பிரைஸ்ல வாங்கிட்டு போங்க,

 

இதற்கு விக்னேஷ் சிவன் எங்களை விற்கச் சொன்னால் உன்னோட கடைக்கு ப்ரமோஷன் பண்றியாடா என்று நகைச்சுவையாக பேசிய காணொளி இணையத்தில் பெரும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

author avatar
Ranjith Kumar