அடேங்கப்பா..? காதல் மனைவி நயன்தாரா பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்… விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க…!!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய அளவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவருடைய நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து நயன்தாரா கைவசம் தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் டு என பல திரைப்படங்கள் உள்ளது. இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்  நயன்தாரா, நேற்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு கணவர் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.