“இனி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் போது இத பண்ணலனா”… அவ்ளோதான்! வந்துவிட்டது புதிய ரூல்ஸ்…. வாட்ஸ்அப்-பின் வந்த அதிரடி மாற்றம்..!

By Nanthini on ஆனி 21, 2026

Spread the love

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வசதியை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஏற்கனவே இருக்கும் ‘வியூ ஒன்ஸ்’ (View once) புகைப்பட மற்றும் வீடியோ அம்சத்தைப் போலவே, இனி ‘வியூ ஒன்ஸ்’ மெசேஜ் (View once text) அனுப்பும் புதிய வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அம்சத்தின் மூலம் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளைப் பெறுபவர் ஒருமுறை மட்டுமே படிக்க முடியும், அதன் பிறகு அந்த மெசேஜ் தானாகவே மறைந்துவிடும்.

தற்போது இந்த வசதி முதற்கட்டமாக ஒருசில ஐபோன் (iOS) பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக (Beta testing) வழங்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் உள்ளிட்ட அனைத்து வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பான அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.