வெற்றிமாறனுக்கு 15 நிமிடம் நிக்காமல் ஒலித்த கரகோஷம்.. சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்ட விடுதலை பாகம் 1 & 2 பார்த்து ஆர்ப்பரித்த வெளிநாட்டினர்… வீடியோ வைரல்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளது. சமீபத்தில் இவர் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது.

vetri

விடுதலை திரைப்படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் திரையுலகில் களமிறங்கினார் காமெடி நடிகரான சூரி. மேலும் இத்திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அசத்தியிருந்தார்.

   
vetri3

இவர்கள் மட்டுமின்றி இயக்குனர் கௌதம் வாசுதேவன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் விடுதலை திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

vetri2

இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவான Rotterdamல்  திரையிட விடுதலை திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டில் உள்ள Rotterdam என்ற இடத்தில் வருடம் தோறும் இந்த விழா நடைபெறும்.

vetri1

இந்த சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்ட விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை பார்த்த வெளிநாட்டினர் எழுந்து 15 நிமிடங்கள் கைதட்டி ஆர்ப்பரித்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..