தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நள்ளிரவு 1 மணி அளவில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் மாநிலப் பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜியும், மாநில முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களான இவர்களுக்கு, சமீபத்திய தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர்களின் அதிருப்தியைப் போக்கும் வகையிலும், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
