தயாராகும் ‘விடுதலை 2’… ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்து அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷின் தங்கை… ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்…

By Begam on ஆடி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.இவரின் தங்கையான பவானி ஸ்ரீ தற்பொழுது வெளியான விடுதலை திரைப்படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ. இதற்கு முன்பு பவானி ஸ்ரீ ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘கா.பெ. ரணசிங்கம்’ என்ற திரைப்படத்திலும்,

   

 

பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகை பவானி ஸ்ரீ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.

சமீபத்தில் நடிகர் சூரியும் விடுதலை 2 திரைப்படத்திற்காக ரெடியாகும் வீடியோ ஒன்றை தனது instagram பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இவரை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை பவானி ஸ்ரீயும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர். இதோ அவரின் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Bhavani Sre (@bhavanisre)