ஓடிக்கொண்டிருக்கும் லாரியில் இருந்து யானை ஒன்று நிலைதடுமாறி சாலையில் விழுவது போன்ற தத்ரூபமான காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. ஒரு குன்றின் மேலிருந்து யானை கார் மீது விழுந்ததில் பலர் உயிரிழந்ததாகவும், வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை யானை காப்பாற்றியது போன்றும் அடுத்தடுத்து பல வீடியோக்கள் வெளியாகிப் பொதுமக்களைப் பதறவைத்தன.
பார்ப்பதற்கு மிகவும் உண்மையாகத் தோன்றும் இந்த வீடியோக்கள், சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுச் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், உண்மையில் இவை அனைத்தும் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோக்கள் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
View this post on Instagram
நிஜத்தில் இது போன்ற விபத்துக்கள் ஏதும் நடக்கவில்லை என்றாலும், பலரும் இதை உண்மை என நம்பி மற்றவர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இணையத்தில் உலா வரும் இது போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ செய்திகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
View this post on Instagram
