நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவரும் பாடகி கெனிஷாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இதனால் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாகவும் கெனிஷாவிற்கு எதிராகவும் அவதூறுகள் கிளம்பிய நிலையில், ஆர்த்தி தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த பரபரப்பான சூழலில், பாடகி கெனிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது வாழ்க்கையில் சந்தித்த துயரங்களையும் ஜெயம் ரவியுடனான தனது உண்மையான உறவையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
தன் மீது சுமத்தப்படும் குடும்பத்தை உடைத்த பழிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “வயிற்றிலேயே ஒரு குழந்தையை இழந்த துரோகத்தை அனுபவித்த நான், ரவி மோகனின் குடும்பத்தைக் கெடுக்க நினைப்பேனா? அவர் ஒன்றும் குழந்தை கிடையாது, தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரேதான் முடிவெடுக்க வேண்டும்; இதில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்? நானும் ரவி மோகனும் உங்கள் கண்முன்னேதான் இருக்கிறோம், எங்கும் ஓடிப்போகவில்லை. சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன, அதைப் பற்றிப் பேசுங்கள். தயவுசெய்து உங்கள் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று கோபத்துடனும் கவலையுடனும் கெனிஷா பேசியுள்ளார்.
புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர்,…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…
பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஒரு "முக்கிய…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும்…
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) விளக்கம் கேட்டதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான…
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, உள்நாட்டுச்…