கணவன் – மனைவிக்குள் வெடித்த சண்டை… 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்ற தந்தையே செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்… ஆந்திராவில் பெரும் சோக சம்பவம்…!!!

Spread the love

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றும் இருவருக்கும் இடையே வீட்டில் கடும் வாக்குவாதம் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் நிலவிய குடும்பத் தகராறு திடீரென உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் கடும் ஆத்திரமடைந்த ராஜு, விவேகமிழந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது 5 வயது மகள் லஹரியை திடீரென ஒற்றைக் கையால் தூக்கிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுமியை மீட்கப் போராடினர். எனினும், ஆழமான தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறியதால், மக்கள் மீட்பதற்குள்ளாகவே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த கொடூரச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெற்ற மகளையே கிணற்றில் வீசிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தை ராமவரபு ராஜுவை போலீசார் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் பெற்ற மகளைத் தந்தையே கிணற்றில் வீசிக்கொன்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.. ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…!!!

திமுக தொண்டரணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த காயத்ரி சீனிவாஸ், தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ.எஸ். (KAS) முன்னிலையில்…

7 minutes ago

தேர்வு முடிவுகள் தந்த துயரம்!… பெட்ரூமை பிடுங்கி, லேப்டாப்பை உடைத்த தந்தையின் கொடூர செயல்.. கதறிய மாணவன்… இணையதளத்தில் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!!

பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகக் கருதப்பட்டாலும், அது ஒரு குழந்தையின் வாழ்க்கையை விடவும், சுயமரியாதையை…

13 minutes ago

கண்காட்சியில் நேர்ந்த பயங்கரம்!.. நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சீறிய ராட்டினம்.. தூக்கி வீசப்பட்ட மக்கள்.. பீகாரை மிரளவைக்கும் பகீர் சம்பவம்…!!!

பீகார் மாநிலம் சசாரம் மாவட்டத்தில் உள்ள பைலட் பாபா தாம் அருகே நடைபெற்ற லண்டன் கருப்பொருள் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு…

23 minutes ago

“அடிச்சுக்கிற மாதிரி நடிப்போம்.. ஆனா ஒன்னா இருப்போம்!”… விஜய் அரசை வீழ்த்த கைகோர்த்த திமுக – அதிமுக?… பின்னணி என்ன?… அதிரும் தமிழக அரசியல்…!!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச்…

35 minutes ago

இனி சென்னை – திருச்சி… மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறந்த மாஸ் ரயில்.. ‘டெஸ்ட் ரன்’ சக்சஸ்… புதிய சாதனை படைத்த தெற்கு ரயில்வே…!!!

தமிழகத்தின் மிக முக்கிய ரயில் போக்குவரத்து தமனியாக விளங்கும் சென்னை - திருச்சி வழித்தடத்தில், ரயில்களின் வேகத்தை அதிகரித்து பயண…

43 minutes ago

“3 கோடி சொத்துக்கு ஆசை” மெடிக்கல் வச்ச காதலி… மருந்து வாங்க வந்தவனுடன் கள்ளக்காதல்… கணவனைப் போட போட்ட ’10 லட்ச ரூபாய்’ ஸ்கெட்ச்… அம்பலமான பகீர் உண்மை..!!

ரவீந்திரா தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு தொடர் சட்டப் போராட்டத்தில் சிக்கித் தவித்து வந்தார்.…

48 minutes ago