நான் சர்வதேச கைக்கூலியா..? எல்லாமே என்னோட சொந்த காசுல செய்யுறேன்… வேதனையுடன் KPY பாலா வெளியிட்ட வீடியோ…!!

By Soundarya on புரட்டாதி 19, 2025

Spread the love

பிரபல பத்திரிகையாளர் உமாபதி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, KPY பாலா சர்வதேச கைக்கூலி என்றும் அவர் வாங்கிய ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் போலியானவை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த KPY பாலா, “என்னை சர்வதேச கைக்கூலி என்று எல்லாம் சொல்கிறார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நான் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் அதை அவர்களுடைய பெயரில் மாற்றிக் கொள்வார்கள்.

 

   
View this post on Instagram

 

A post shared by Balan Akassh Balaiyan Jaganathan (@bjbala_kpy)

அதனால் வண்டி நம்பரை மறைத்து கொடுப்பேன். நான் வாங்கி கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களுமே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தவறான நம்பர் என்றால் ஆம்புலன்ஸ் எப்படி ஓடும். இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் என்னுடைய சொந்த காசு, நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் தான் செய்து வருகிறேன். சர்வதேச கைக்கூலி என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.