‘மனுஷன் பாக்க தான் terror-ஆ இருக்காரு… ஆனா குழந்தைகிட்ட எப்படி அடிவாங்குறாரு’னு… இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட fun வீடியோ வைரல்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

   

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

நடிகை சோனியா அகர்வால் காதல் திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது மூன்று குழந்தைக்கு தந்தையாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்பொழுது தனது குழந்தை தன்னை அடித்து கொஞ்சி விளையாடும் விடீயோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள்’ ‘மனுஷன் பாக்க தான் terror-ஆ இருக்காரு ஆனா குழந்தைகிட்ட எப்படி அடிவாங்குறாரு’னு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…