இது இல்லாம என்னால இருக்க முடியாது… நான் இதுக்கு அடிமையாகிட்டேன்… நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்ட வீடியோ..!!

By Soundarya on ஆடி 29, 2025

Spread the love

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி. இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில் சதீஷ் உடன் இணைந்து நாய்சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் எடை மெலிந்து காணப்படும் நிலையில் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில், ஒரு வகையான பானத்தை  தொடர்ந்து குடித்து வருவதாக பவித்ரா லட்சுமி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீப நாட்களில் ஒரு க்ரான்பெர்ரி பானத்தை  (cranberry kombucha) அதிகமாக குடிக்கிறேன். இந்த பானத்திற்கு அடிமையாகும் அளவிற்கு இதன்டேஸ்ட் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. ஸெப்டோ (Zepto) ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில்   ரூ. 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானம் என்னுடைய உடலுக்கு நல்லது என்று மருத்துவர் சொன்னதால் அதிக அளவில் இந்த பானத்தை குடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.