தமிழில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார். இவரின் நடிப்பில் தற்போது வாஸ்கோடகாமா, எரியும் கண்ணாடி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இக்குழந்தையை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பெற்றார் நகுலின் மனைவி. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர்.

நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தற்பொழுது தனது கணவருடன் சூப்பராக பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
