குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விரம்காம் வட்டம், சச்சானா கிராமத்தில் வீட்டின் கதவு அமைப்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியதில், ஒரு தரப்பைச் சேர்ந்த கும்பல் மாமன் மற்றும் மச்சான் ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, விரம்காம் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்தே, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ்…
தற்போதைய தமிழ்நாடு அரசியல் களம் நடிகர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சுற்றியே சுழன்று வருகிறது. நடந்து முடிந்த…
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகக் கடல் வழித்தடமாகத் திகழும் கருங்கடல் பகுதியில், 23 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த…
சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் பகுதியில் மின்கம்பிகளில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பிற பத்திரப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவோ…
பெற்றோர்களின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தகைய பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று…