நடிகை காயத்ரி கடந்த 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அழகி, பொன்னூஞ்சல், மோகினி, பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, சித்தி, 2 நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

பிரபல நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை காயத்ரி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த ஆண்டு இவர்களுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த 4 மாதத்தில் காயத்ரி யுவராஜ் தம்பதியினர் வளசரவாக்கத்தில் ஒரு வீட்டை கட்டினார்கள். இந்த நிலையில் காயத்ரி யுவராஜ் தம்பதியினர் அந்த வீட்டின் மேல் தளத்தில் கணபதி ஹோமம் நடத்தினர்.

அங்கு தான் டான்ஸ் ஸ்டூடியோவை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
