ராங் ரூட்டில் வந்த பெண்…! “ஒரே நொடியில் பேருந்தில் சிக்கி…”காப்பாற்றிய டிரைவருக்கே திட்டு விழுந்த அவலம்… திக் திக் வீடியோ….!!

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தவறான பாதையில் (Wrong Side) வந்த பெண் ஒருவர், எதிரே பேருந்து வருவதைக் கண்டும் நிறுத்தாமல் வந்து அதன் மீது மோதிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. விபத்து நேரும் முன்பே பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக பிரேக் போட்டதால், அந்தப் பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்துக்குப் பெண்ணின் கவனக்குறைவே காரணம் என்பது தெளிவாகத் தெரிந்தும், அங்கிருந்த நபர் ஒருவர் பேருந்து ஓட்டுநரைத் தேவையின்றித் திட்டித் தீர்த்தது காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பேருந்து ஓட்டுநரின் தவறில்லை என்ற போதும், “பெரிய வாகனத்தை ஓட்டுபவர் தான் குற்றவாளி” என்ற பொதுவான எண்ணத்தில் அந்த நபர் வாக்குவாதம் செய்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்திய பெண்ணைக் கண்டிக்காமல், உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரைத் துன்புறுத்தியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், தவறு யார் பக்கம் இருந்தாலும் பேருந்து ஓட்டுநர்களையே மக்கள் குறிவைப்பது வேதனையான விஷயம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.