உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஜேஷ் மௌரியா என்ற லோகோ பைலட், கடந்த 2025 காதலர் தினத்தன்று அனிதா என்பவரைத் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு அனிதா தனது கணவரின் பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தியதுடன், பிரஜேஷையும் அவரது தாயாரையும் கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பிரஜேஷ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் பிரஜேஷ் ஒரு ஆண் என்பதையும், குடும்பப் பாதுகாப்புச் சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதையும் காரணம் காட்டி, காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அலட்சியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அனிதா தனது கணவரை சரமாரியாக தாக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி கண்டனத்தை குவித்து வருகிறது. சட்டம் பாதிக்கப்பட்டவர்களின் பாலினத்தைப் பார்க்காமல், உண்மையான குற்றத்தின் அடிப்படையில் மட்டும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் எழுந்துள்ளது.
Loco Pilot Brajesh Maurya from Gonda in UP and his Mother Sarita Devi were brutally abused and assaulted by his wife Anita.
Brajesh met Anita through Facebook in 2022 and married her on Valentines day in 2025.
After the marriage, Anita wanted to kick her In laws out of the… pic.twitter.com/gs8o9w5IiQ— VARAHA WARRIOR (@VarahaWarrior) March 6, 2026
