ஒரு பெண் கோதுமையைக் கழுவி, அதனைத் துணியில் முடிச்சாகக் கட்டி சலவை இயந்திரத்தின் உலர்த்தி (Dryer) பகுதியில் வைத்து உலர்த்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கோதுமையை உலர்த்தப் பிரகாசமான சூரிய ஒளி தேவைப்படும் நிலையில், இடவசதி இல்லாதவர்களுக்கும் போதிய வெயில் கிடைக்காத காலநிலையிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்றாக அமையும் எனச் சிலர் கருதுகின்றனர். ஒரு பொதுவான வீட்டுப் பிரச்சினைக்குக் குறைந்த வளங்களைக் கொண்டு எளிய தீர்வைக் கண்டறிந்ததற்காக அந்தப் பெண்ணின் சமயோசித புத்தியைப் பாராட்டி, இதனை ஒரு ‘ஸ்மார்ட் ஹோம் ட்ரிக்’ எனப் பல பயனர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
இருப்பினும், இம்முறைக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. சலவை இயந்திரங்கள் துணிகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவை என்றும், தானியங்களை அதில் வைப்பது இயந்திரத்தைப் பாதிக்கும் என்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பலர் எச்சரிக்கின்றனர். கோதுமை தானியங்கள் இயந்திரத்தின் உட்பகுதிகளில் விழுந்தால், அது உலர்த்தியைச் சேதப்படுத்தலாம் அல்லது அடுத்தமுறை துணி துவைக்கும்போது மாசுகளை ஏற்படுத்தலாம் என்ற கவலைகளையும் பயனர்கள் முன்வைக்கின்றனர். இத்தகைய கலவையான விமர்சனங்களால், இந்த வீட்டு உபயோக முறை தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
