“ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி…” நடுரோட்டில் வாலிபரை இழுத்து வந்த கும்பல்…. தடி, கட்டைகளால் தாக்கி கொடூரம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் லிசாரி கேட் காவல் எல்லைக்குட்பட்ட நூர் நகர் ஹால்ட் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே இளைஞர் ஒருவர் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சில நபர்களுடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், போதையில் இருந்த ரவுடிக் கும்பல் அந்த இளைஞரை நடுரோட்டிற்கு இழுத்து வந்து, அவரது ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணமாக்கி கொடூரமாகத் தடி மற்றும் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. தாக்குதலின் கொடூரம் தாங்காமல் அந்த இளைஞர் அலறித் துடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

   

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நடுரோட்டில் வெறியாட்டம் ஆடிய அக்கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது. இக்கொடூர தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட லிசாரி கேட் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 போதை ரவுடிகளை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.