சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வரும் ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பீஹாரின் சக்ரா பகுதியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஆற்று பாலத்தில் தலைகீழாக தொங்க கீழே ஒரு பெண் நீரில் மூழ்குவது போல நடிக்கின்றார். பார்ப்பவர்களுக்கு உண்மையான மீட்பு நிகழ்வைப் போல தோன்றிய நிலையில் பிறகு அது வெறும் ரீல்ஸ் எடுப்பதற்காக செய்யப்பட்ட நாடகம் என தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உயிரை ஆபத்தில் ஆழ்த்தி ரீல்ஸ் எடுப்பது தவறான முன்மாதிரி என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
படைப்பாற்றல் என்றால் ஆபத்து இல்லை என்று வலியுறுத்தும் கருத்துக்களும் பதிவாகியுள்ளது. இன்றைய காலத்தில் ரீல்ஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் உயிருக்கு ஆபத்தான செயல்களை பின்பற்றுவதை கடுமையாக பலரும் எச்சரிக்கின்றனர். இந்த ஆபத்தான செயல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல் அவசியமென்றாலும் பாதுகாப்பை மீறி செயல்படுவது ஆபத்துதான். அதனை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
वीडियो बनाने के लिए इतना रिस्क ले रहे है आजकल के युवा 😱 pic.twitter.com/HNy5NfcqhZ
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 15, 2025
